மழை - உதயா

அகன்று விரிந்து
அடர் சேர்ந்திருந்த
காக்கைகளின்
சிறகுகளில்

சற்று மெதுவாய் துவங்கி
வேகமாய் உதிர தொடங்கியது
வெண்புறாவின் சிறகுகளும்
கொக்குகளின் சிறகுகளும்

ஆங்காங்கே பூக்கள்
இதழ்தனை விரித்து
நகையின் வாசத்தை
மாருதத்தில் ஏற்றி
பரப்பிக் கொண்டிருந்தன

சில விருட்சங்கள்
சன்னலின் வழியே
எட்டிப் பார்த்தன

அவர்களையும்
விட்டுவைக்கவில்லை
வெண்மயிலின் இறகுகள்
பட்டும் படாத மாதிரி
தழுவிச் சென்றன

சிதறிக்கிடந்த
தேவதையின் இறகுகள்
வெகுவாய் சேர்ந்து
ஓடிக்கொண்டே
அதன் சிறகினில்
புகுந்துக் கொண்டன

மீளாப் பயணத்தில் விழுந்து
கானல் சிறகினைப்
பற்றிக் கொண்டு
மீண்டும் புவி வாசல் தேடி
அந்த நீல வானில் அலைகிறது
மீண்டும் பிறந்துள்ள
வேறொரு சிறகுகள்

எழுதியவர் : உதயா (19-Dec-15, 8:34 pm)
பார்வை : 1380

மேலே