அவன்தானே படைப்பாளி
அவன்தானே படைப்பாளி
ஏதோ…… ஏதோ…
கிறுக்கியதை
கவிதை என்றார்கள்!
கவிதை ஆனதால்…
என்னையும்………
கவிஞன் என்றார்கள்!
பல கவிதைகள்
புனைந்ததாலே
கவி வேந்தன்
என்றார்கள்
கவி வேந்தன்
என்றவுடனே….
வேந்தனுக்கே உரிய
கர்வமும் கூடவே
கௌவிக் கொண்டது
கர்வத்துடனே…
தாறுமாறாய்
பற்பல கவிதைகள்
புனைந்ததால்..
கூடிப் போனது
எண்ணிக்கையில்..!
எண்ணிக்கையில்
கூடிப்போன
கவிதைகளில்…
காணாமற் போன
உயிரோட்டத்தை…
உயிரரூட்டினான்!!
ஒருவன்!
அவன்…..
கவிஞனுமில்லை!
புலவனுமில்லை!
கம்பனுக்கே…
எடுத்து கொடுத்தவன்
போலவே எனக்கும்
ஒருவன்!
அவன்தானே படைப்பாளி!
----- கே. அசோகன்.