இரண்டு தலை கவிதைக்கு - உதயா

காதல்
கற்று தந்தது
கவிதை ...!

கவிதை
கற்று தந்தது
ரசனை ...!

ரசனை
போதித்த யுக்தி
நுணுக்கம் ...!

நுணுக்கம்
போதித்த யுக்தி
உணர்ச்சி ...!

உணர்ச்சி
தேடச்சொன்னது
தன்னை சமூகத்தில் ...!

சமூகத்தில்
உள்ளடங்கியது
வகைப்பாடுகள் ...!

வகைப்பாடுகள்
உள்ளடக்கியது
கருப்பொருள்கள் ...!

கருப்பொருள்கள்
உள்ளடக்கியது
கவிதைகள் ...!

கவிதைகள்
உருவாக்கி தந்தது
கவிஞன் ...!

கவிஞன்
தந்தது
ஒரு நல்ல காதல் ...!


( இந்த கவிதை கிட்ட தட்ட ஒரு சங்கிலி தொடர் மற்றும் இதில் உள்ள ஒவ்வொரு பத்தியும் மேல் இருந்து கீழ் படித்தாலும், கீழ் இருந்து மேல் படித்தாலும் ஒரே மாதிரியாக இருக்கும் இதுதான் இந்த கவியின் முயற்சி . மேலும் கவியின் தலைப்புக்கும் இரண்டாவது யுக்தியை பயன்படுத்தி உள்ளேன்

உதாரணம் :

கவிஞ்சன்
தந்தது
ஒரு நல்ல காதல் ...!


ஒரு நல்ல காதல்
தந்தது
கவிஞ்சன் ...!

அதோடு .. இக்கவியின் கருவானது . வாசகர் பார்க்கும் சில கோணங்களில் பொருந்தி அமையும் )

எழுதியவர் : உதயா (22-Dec-15, 3:41 pm)
பார்வை : 137

மேலே