என் கிறுக்கல்கள்

பால் போன்ற
பல்லிடுக்கில்
பனிக்கட்டி கடித்துச்
சுவைக்கிறாய்...
குளிர்வதென்னவோ
எனக்குத்தான்!!
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
எட்டியே நின்று
ஓரப்பார்வை
வீசிக்கொல்லும் நீ
அஹிம்சைவாதியா?
அல்லது
இம்சைவாதியா?!
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
கூந்தல் நிறைந்த
பூக்களுடன் நீ
வீதிக்கடந்து பல
நாழிகைக் கடந்துங்கூட
என் இதய அறையில்
நிறைந்துக் கிடக்கிறது
உன் வாசனை!!!
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
இனியேனும் தள்ளியே
நின்று மௌனம் வீசாமல்
ஒரு வார்த்தையேனும்
பேசிவிடு!...அல்லது
கண்ட நொடியிலேயே
காதலுறச் செய்த
அக்கண்களாளேலேயே
என்னைக்
கொன்றுவிடு!!!
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

எழுதியவர் : Daniel Naveenraj (22-Dec-15, 3:01 pm)
Tanglish : en kirukkalkal
பார்வை : 105

மேலே