மகனுக்கு

காதல் வயபட்டாயா?
அல்லது
காதல் உன்னை வயப்படுதியதா?
கலக்கம் வேண்டாம்.
உலகை தன் வயப்படுத்திய
ஒரே விஷயம் காதல் தான்
காதல் கடல் போன்றது
ஓர் அலை என்பது சாத்தியம்
அல்ல
அலை அலையாய்
அலை அலையாய்
பல கணங்கள் பல காதல்
பல சந்திப்பு பல உறவு
இதுவே நிதர்சனம்.
காதலியை புரிய முடியாது. ஆகவே

காதலை புரிந்து கொள்.
காதலில் மூழ்குதல் எளிது
ஆனால் நீந்துதல் கடினம்
முதலில் நீந்த கற்றுகொள்.
பின் மூழ்கி போ
காதலில் காயங்கள் ஏராளம்
அனைத்தும் சுகமானவை.
சுவையானவை.
சுகமான சுவையை
உன் சொந்தமாக்கி கொள்வதும்
சோகமாக்கி கொள்வதும்
உன் கையில் உள்ளது

எழுதியவர் : Athirstam (22-Dec-15, 4:34 pm)
Tanglish : maganukku
பார்வை : 77

மேலே