நீலக் கண்ணாடி -கார்த்திகா

வெண் பளிங்கு முகம்
ரசனையில் முகில்களின் இதம்

விரல் தீண்டும் வானவில்லில்
வர்ணங்களின் கரைதல்

ஆடு மாடு சிங்கம் புலி
விளையாடும் வீதியில்

தேரோட்டும் ராதை
கொஞ்சி விளையாடும்
மாயக் கண்ணன்கள்

எல்லையில்லா வானின்
மேகங்கள் நிறைந்து விரவுதலில்
யாவும் தோற்ற மாயைகளே!

எழுதியவர் : கார்த்திகா AK (22-Dec-15, 4:17 pm)
பார்வை : 82

புதிய படைப்புகள்

மேலே