வெம்மைப் புனல்கள் -கார்த்திகா

எங்கள் களஞ்சியங்கள்
அன்று நிறைந்திருந்தன
பாத்திரம் அறிந்து
பிச்சையிட்டோம்
தாய் போன்றவள்
தண்ணீர் என்று
கரைகளைத் தொழுது
நிற்கிறோம் இன்றும்
நதி நீர் இணைப்பு
முல்லைப் பெரியாறு
வெள்ள நிவாரணம்
காவிரி டெல்டா
பிரச்சனை எதுவாகிலும்
நாட்டிற்கு சோறுபோட
ஏர் தாங்கி நிற்கிறோம்
இப்பொழுதும் எங்கள்
களஞ்சியங்கள் திறந்தே கிடக்கின்றன
வெறுமையைத் தாங்கியபடி!!