என் தங்கை
![](https://eluthu.com/images/loading.gif)
என் தங்கையே!..
விளக்குகள் கையில் ஏந்தி
விண்ணில் பறக்கும் பட்டாம்பூச்சியே!..
என் மேல் பாசம் வைத்தாயோ!..
எந்தன் கனவுகள் பார்த்தாயோ!..
இல்லை!.
உணர்வுகள் புரிந்தாயோ!...
"டேய் அண்ணா" என்றழைத்தாயடி
என் அகிலமே அன்பால் கரைந்து போனதடி!..
எழுத்தாய் நின்ற ஆசைகளை!..
உணர்வாய் நீ களைய!..
பட்ட மரம் நான்!...
பச்சை மரமானேன்!.
நான் உன்னிடம்
** சண்டையிட ஆசையடி!..
** விளையாடிட ஆசையடி!..
** நீ எனை திட்டிட ஆசையடி!..
** உன் கையில் அன்னம் உண்ண ஆசையடி!..
** ஊர் சுற்ற ஆசையடி
** உன் தலை குட்டிட ஆசையடி!..
** என் கோபம் காட்டிட ஆசையடி!..
** என் பாசம் தந்திட ஆசையடி !...
வந்தாள் அவள்!..
எனக்கான விடியலாய்!...
வீசும் தென்றலாய்!...
பேசும் மௌனமாய்!...
என் தங்கையாய்!...
ஏன் இவ்வளவு தாமதம் உனக்கு!...
உரைத்திருந்தால் தாயின் கருவறை கடன் வாங்கி பிரசவித்திருப்பேன்!..
என் கவிதைகள் பேசுமடி
உடன் பிறக்காவிட்டலும்
என் தங்கை நீ என்று....