ஓர் இதயம்

உதிர்ந்து போன ஒற்றைப் பூவாய்
என் காதல்..!!!
சருகாகி போகாமல்.. இன்னும்
உன் வழித்தடத்தில் வீழ்ந்து கிடக்கிறதே..!!

நீ கடந்து போகும் தடந்தனில்
ஓர் இதயம் கிடப்பதை உணர்ந்திருக்கின்றாயா??

உன் கால்களுக்கு சோடியாய்..
மேலும் ஓர் சோடிக் கால்கள் சேர்ந்து நடப்பதால்..!!

அந்த நொந்து, உதிர்ந்து போன
இதயத்தை நினைப்பது எங்கே..!!

நீ மிதித்து விட்டு போனாலும் ஆச்சரியமில்லை தான்.. !!

இவள் நிலா

எழுதியவர் : இவள் நிலா (23-Dec-15, 11:34 pm)
Tanglish : or ithayam
பார்வை : 315

மேலே