நானும் கவிதை எழுதுகிறேன்

கவிதை எழுத ரொம்ப நாளா
எனக்கு ஆசை
என்னதான் செய்ய தினமும் மனத்துக்குள்
போட்டேன் அசை
வாக்கியத்தை இருமுறை சொல்லு
அதுவே மெல்ல மாறும் கவிதை
சொன்னான் ஒரு நண்பன்.
வாக்கியத்தை சொல்லு இருமுறை
மெல்ல அதுவே மாறும் கவிதை
சொன்னேன் கொஞ்சம் மாத்தி

வருதுடா உனக்கும் கவிதை
நண்பனாய் சொன்னான்
சொல்றேன் கேள்
மேலே ஒரு ஆலோசனை
இரண்டாம் முறை சொல்லு
அங்குங்கு கொஞ்சம் அழுத்தமா
கொஞ்சம் நட்புடன்...
கேளு என் கவிதையை இப்ப..

வாக்கியத்தை சொல்லடா இருமுறை
மெல்ல அதுவே மாறும் கவிதை
வாக்கியத்தை சொல்லடா .... இரு...முறை
மெல்ல அதுவே மாறுமடா ... நல்ல.... கவிதை

நண்பர்கள் போதும்டா சாமி உன் கவிதை இப்ப ...

இப்ப...
நானும் எழுதுறேன் சில... கவிதை...

- செல்வா

எழுதியவர் : செல்வா (24-Dec-15, 1:08 am)
சேர்த்தது : செல்வா
பார்வை : 749

மேலே