பெண்கள் பொறாமையோடு
மார்கழி மாத வெண்பனி கலந்த
அதிகாலையில்
நீ கோலமிட கிளம்பியபோது
நான் விட்ட பெருமூச்சே
தீயாய் சுட்டது என்னை...
ஆனால்
உன் மூச்சுக் காற்றுப்பட்ட மகிழ்ச்சியில்
அதிகாலை பனிக்காற்று...
நீராடி விரிந்து பறந்து கிடக்கும்
உன் கார் கூந்தல் கண்டு
கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொள்கிறது
பனித்துளி....
உன் விரல் பட்ட பாக்கியத்தில்
பெருமைப்படும் கோலப்பொடி...
பஜன் பாடி செல்லும் கூட்டத்தில்
பெண்கள் பொறாமையோடு
உன்னை பார்த்துச் செல்வது
எத்தனை பெருமை எனக்கு??
தினம் ஒரு கோலமாக
என் அழகுக் கோலம்
வாசலில் கோலமிடுவது
மார்கழி மாத சிறப்பின் மற்றொரு அம்சமா??
அப்படியானால்
ஆண்டு முழுவதும்
மார்கழியாக இருந்தால்???....