செல்லமே
உன்
உச்சி முகர்ந்து
இட்ட முத்தத்தின் ஈரத்தை
நீ தடவி அழித்த அந்தத் தருணம்
எனக்கும்
ஆனந்தமாகத்தான்
இருந்தது. ...
இன்று
அலைபேசியின்
முகப்பில் பதிக்கும்
உன் உதட்டுப்பதிவு
உயிர் போகும் வரை
கல்லெறிந்து கொல்லுதடி
- பிரியத்தமிழ் -