கவிதைகள்
எண்ணங்கள் வெளிப்பட
வார்த்தைகளுடன் விளையாட
வந்தன கவிதைகள்
என்னுள். சந்தங்கள்
பலகொண்டு வந்தன
என்னுள் கவிதைகள்
நோக்குகள் மாற
மாறஎன் கவிதையின்
போக்குகள் மாறின
நேர்த்தியை பெற
பெறஎன் கவிதைகள்
கீர்த்திகள் பெறும்
என்னை உணர்ந்ததால்
வந்தன கவிதைகள்
சில நாட்கள்
என்னை மறந்ததால்
வந்தன கவிதைகள்
சில நாட்கள்
எண்ணத்தின் வேகத்துடன்
சில கவிதைகள்
வார்த்தையின் கோலத்தில்
சில கவிதைகள்
இரண்டும் கலந்தும்
சில கவிதைகள்
ஆயிரம் கவிதைகள்
என்னுள் ஆயினும்
வந்தன சிலகவிதைகள்
என் வாழ்வுடன்
வரும் இன்னும்
பல கவிதைகள். . .
- செல்வா