இயலாமை
இயலாதான் ஏமாற்றம்..
சினமாதல் இயல்பாமோ!
தகுதி உயர்த்த திறனற்று..
பொறாமையிலே புலம்பலாமோ!?
இயலாமை மறைத்திடவே..
குறைக்கூறிப் பிழைத்திடுவாய்!
உன் கைகூடா ஆசைகளால்.
கனலாய் வார்த்தை வீசிடுவாய்!
உன் அகம்பாவந்தனை விட்டால்..
ஆசை வாழ்வை அடைந்திடுவாய்!
முன் கோவம் கொள்ளாமல்..
முன்னேற முயன்றிடுவாய்!
ஏக்கத்தை வேட்க்கையாக்கி..
வென்றிடவே வழி தேடு!!
திறன் கொண்டோன்..
சினம் கொல்லான்!!
சினம் வெறும் இயலாமையின் வெளிப்பாடு!