வாசமில்லா சுதந்திரம்

வாங்கிவந்த வரமா?
வறுமைதந்த உரமா?
வறுமை வாசல் வரை நின்றதால்;
வாசமும் மறந்ததே!
சாக்கடையும் சகித்துக்கொண்டாய் ;
சங்கடத்தை தொலைத்துவிட்டாய் !
உடுப்புகள் போடவும் - நீ
உள்ளே இறங்கணுமா?
நெஞ்சம் கனக்கிறது;
நின்னை நினைக்கையிலே!
அண்டை வெளி ஆராய்சி;
அதிசயத்தின் விளிம்பில் - நாம்
விண்கற்களையும் விடவில்லை;
விஞ்ஞானிகள்!
அடைப்புகளை நீக்க
ஆஞ்சியோகிராம்!
மருத்துவத்தின்
மகத்தான சாதனை! இருந்தும் - நீ
கரையேரும் நாள் எப்போ?
கவலையில் நான்?
சுதந்திரம் கிடைத்தும்'
சுகம் இல்லை !