காதலை வெல்கவே ------ கட்டளைக் கலிப்பா
உள்ளம் தேடிய உன்னத அன்பினால்
------ உன்றன் சித்தமும் காதலைக் கண்டதால்
வெள்ளம் போலவும் வேகமாய்ப் பாய்ந்திட
------- வென்றாய் என்றனைக் கண்மணிக் கண்களால் .
பள்ளம் தோண்டியும் நீக்கிடல் தக்கதா?
------- பண்பாய்க் காதலை ஏற்பது நன்றெனக்
கள்ளம் நீங்கிய நெஞ்சினில் நிற்கவும்
------- கற்பின் மேலெனக் காண்பவர் சொல்வரே !