பாப்பா பாடல்

பாவாடைச் சட்டை போட்ட
****பாப்பாவும் பார்க்குது !
ஆவாரம் பூவைப் போல
****அழகாகச் சிரிக்குது !
நாவாரத் தானும் பாடும்
****நாடகமும் நடத்துது !
நோவாமல் தாளம் போட்டு
****நுள்ளியுள்ளம் இழுக்குது !!

கால்கொலுசின் சலங்கைச் சத்தம்
****காதில்தேன் பாய்ச்சுது !
பால்வடியும் பிள்ளை முகமும்
****பாங்குடனே இருக்குது !
மேல்மாடி வீட்டிற் குள்ளே
****மெய்சொக்க வைக்குது !
வேல்முருகன் அருளி னாலே
****விளையாடி மகிழுது !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (29-Dec-15, 10:11 pm)
பார்வை : 93

மேலே