என்னுள் வளர்பெண்மை நீ
என்னோடு பேசுமா இந்நிலவே?
கண்முன்னே போகுதே என் கனவே!
மனமெல்லாம் மயில் போல
மழை மேகம் கண்டு ஆடுதடி!
மயிலின் மழை மேகம் நீதானே!
அடிநெஞ்சம் அடங்காமல்
உன் பெயரை மட்டும் சொல்லுதடி!
என்னுள் வளர்பெண்மை நீதானே!
பால் வழிந்திடும் பார்வை உனதே!
தேன் ஒழுகிடும் தேகம் உனதே!
கண் உரசி நான் நாளும் கரைய,
வேர் தொலைந்துதான் விழுதாய் ஆனேன்!
உன்னை பற்றி கொண்டேனே!
நால்விழியில் ஒர்கனவை நாம் வளர்ப்போம் வா!