வறுமையில் வாடி இருந்தால் படிக்கவும்
இரு கை இரு கால் கொண்டு கையேந்தும் ஜீவன்களை வெறுக்கும் நெஞ்சங்களில் நானும் ஒருவன்
இருந்தும் அன்று நான் அதை வெறுக்கவில்லை
'கவலை கொண்டேன்'
மணல் படிந்த தலை கூந்தலும்
மக்கி கிழிந்த உடையுடன் நின்ற சிறுமியை கண்டு
அவள் ஒரு கூட்டு பறவையாக இருந்துதிருந்தால்
நம்மை போல் கூடி பறந்து இருப்பாள்
கூண்டு பறவையாக இருந்துதிருந்தால்
உண்டு உறங்கி இருப்பாள்
அவளோ கழுகு கூட்டில் சிக்கி தவிக்கும் சின்ன சிறு பறவை
கிணற்றில் நீந்தும் வயதில்
கடலில் எதிர் நீச்சலிட்ட
அவளின் எதிர்காலம் எண்ணி அச்சம் கொண்டேன்
தண்ணீரில் கண்ணீர் வடிக்கும் மீன்களின் கண்ணீர் யாருக்கு தெரிந்தது
வறுமையில் துடிக்கும் இந்த சிறுமியின் பசி யாருக்கு புரிந்தது
பசி என்பது ஒரு மணி நேரம் உணவு தாமதம் என்றே நினைத்தேன்
அன்று தான் புரிந்தது பசி என்பது உணவற்று மெலிந்த
அவள் உடலின் தோற்றம் என்று
இறை வழிப்பாட்டிற்கு கொட்டி கொடுக்கும்
பலருக்கு புரிவதில்லை
அவள் வயிற்று பசிக்கும் இரை தேவையென்று
அந்த பிஞ்சு குழந்தைக்கு பசி கொடுமையை காட்டிய
மனிதநேயமற்ற மிருகத்தை தீயிலிட இட நெஞ்சம் சீறியது
ஆனால் இந்த சராசரி மனிதனால்
அவள் கையில் இருந்த சிறு புத்தகம் மட்டுமே வங்க முடிந்தது
அதில் எந்த வண்ணமும் தெரியவில்லை அவளின் எதிர்கால எண்ணமும்
சுடும் தரையில் வெறும் காலில் நிற்கும்
அந்த குழந்தையின் வலியும் வாழ்கையும்
ஒரு கேள்வி குறியாக மனதில் ஆழமாக பதிந்தது..!