புத்தாண்டே வருக
புத்தாண்டே வருகவே !
புத்துணர்வுத் தருகவே !
புகுத்திடுவோம் புதுமையினை
புத்தாண்டில் மக்களிடம் .
வகுத்திடுவோம் வாழ்வுமுறை .
வந்திடுமே நல்வாழ்வு !
பகுத்திடுவோம் பொருட்களையும் .
பல்லோரும் பயன்பெறவே !
பழையனவும் உள்ளதெல்லாம்
பட்டினியால் கிடப்பவர்க்கு
அழைத்துநாமும் தந்திடுவோம் .
அதுவன்றோ புத்தாண்டு !
மனிதநேயம் ' கொண்டுநாமும்
மக்களினம் வாழ்வதற்குப்
பருவத்தே கொடைசெய்வோம் .
பார்மிசையில் உலகநெறி !
புத்தாண்டே வருகவே !
புதுவாழ்வு மலர்கவே !
வறியார்க்கு ஈதலின்றி
வருகின்ற செல்வத்தைஎவரும்
அறியாமல் மறைகின்ற
அறிவிலிகள் மனப்போக்கு
உறுதியாக மாறவேண்டும்
உன்னதமும் புத்தாண்டில்
பெறுதல் வேண்டும் .