திறமை

பெற்றோரின் திறமை,
பிள்ளைகள் வளரும் ஒழுக்கத்திலே!
ஆசிரியரின் திறமை,
மாணவன் வாங்கும் மதிப்பெண்ணிலே!
விவசாயியின் திறமை,
அவன் வயலில் விளையும் விளைச்சலிலே!
மருத்துவரின் திறமை,
அவரிடம் வரும் நோயாளியின் சுகத்திலே!
மாணவனின் திறமை,
அவன் ஒழுக்கம், மதிப்பெண்ணிலே!
..................................................................
..................................................................
..................................................................
ஒவ்வொருவரின் திறமையும்,
அவர்கள்
உருவாக்கும் மற்றவர் செயலிலே!