தாய் தாரம் மகள்

..."" தாய் தாரம் மகள் ""...
வசந்தங்கள் வரவேற்க
வாயிலோர தென்றலாய்
புன்னகைக்கு சொந்தக்காரி
மலர்ந்த பூவாய் காத்திருக்க ,,,
மல்லிகை தோட்ட வாசம்
தெருவெங்கும் கமகமக்க
தேவதைகள் இசைமீட்ட
திரைவிலகா நித்திரையில் ,,,
இமைகள் துடிக்க மறந்து
விழி அணைக்க உறக்கம்
என்றாலும் உறங்காதென்
இதயமாய் துடிக்கின்றாய் ,,,
விளக்கொளி விட்டிலாய்
விழியிருந்தும் வீழ்கிறேன்
உன் அன்பெனும் ஆழமான
அழகிய புதை குழியிலே ,,,
வாய்ப்பில்லை கிடைத்தால்
செத்து பிறக்க ஆசைதான்
மீண்டும் எனை சுமப்பதுன்
தாலாட்டும் மடியென்றால் ,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...