நட்பு ஒன்றே போதுமென்று
நண்பர்கள் இல்லையென்றால் நரகம்தான்
நான் கூட விரும்புவது சொர்க்கம்தான்
திரும்ப திரும்ப தினம் வரும் நாளெல்லாம்
விரும்ப விரும்ப நட்போடு மகிழலாம்
குறும்புகள் வம்புகள் பலவிதமாய் செய்யலாம்
கூடியிருந்து பொழுதுகளை கழிக்கலாம்
இன்பத்தின் வகைகலென்ன அத்தனையும்
இனிமையாக நட்போடு நுகரலாம்
துன்பத்தின் நிழல்கள் கூட வேண்டாமென்று
துரத்தி துரத்தி தோழமையோடு விரட்டலாம்
புன்னகைக்கு சொந்தமென நாமெல்லாம்
புதிய புதிய நகைசுவையாய் பருகலாம்
அறிவு பெருக அறிவுரையாய் பகரலாம்
அனைத்தும் அறிய ஆவல் கொண்டு பேசலாம்
ஆசையெல்லாம் நட்பு கொண்டு தெளியலாம்
ஆதி உண்டு முடிவு இல்லை நட்பை நம்பலாம்