மாற்றி யோசி

மாற்றி யோசி
அழுத்தமாய் நட
புதை மணலில்….
ஆழமாய் குதி
ஆழ்கடலில்….
உயரவே போ..
அந்தரத்தில்!
வேகமாய் ஓடு
மலைக்குன்றில் !
ஓவியம் வரைக
காற்றினில்…?
பாடுக முகாரி
மங்கல நாளில்
என்றார்கள் பலர்
அனுபவம்
அறிவுறுத்தியது
மாற்றி யோசி
என்றே….!