ENGE EN POO ?

உறங்கும் பொழுது உறைந்துபோன
பிஞ்சுக் கவிதைகளின்
வெடித்த நெஞ்செழும்புகள்...

இரத்தத்தில் நனைந்த
என் கவிதையின் பக்கங்களில்
மயான வாடை...
எங்கே என் பூ..?

ஆயுதங்கள் ஏந்தியவர்களின்
அமைதி வெட்டப்பட்டுவிட்டதால்
சிறகுகளை பத்திரப்படுத்திவிட்டதா
என் சமாதானப் புறா..?

மரண ஓலங்களின் நடுவே
மறைந்து போய் விட்டதா
என் குயிலின் கீதம்..?

இனம் பார்த்து வரவதில்லை காதல்
நிறம் பார்த்து தொடுவதில்லை காற்று
நிலம் பார்த்து பெய்வதில்லை மழை
பிணம் தின்னும் கழுகுகளும்
பிரேதங்களில் சாதி பார்ப்பதில்லை...

காற்று,மழை,வானம்,பூமியென இயற்கையெல்லாம் உன்னோடு
இணங்கி இருக்க,

செயற்கையாய் நீ மட்டும் ஏன்
செத்துப் பிழைக்கிறாய்..?

ஆயுதங்களை எறிந்துவிட்டு
இதயத்தால் பேசேன்...

இனிமேலாவது
பயமின்றி பூக்கட்டும்
எனது பூக்கள்...

எழுதியவர் : SUREKA (10-Jul-10, 3:17 pm)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 575

மேலே