மாநகர தார் சாலைகளின் புலம்பல்
அடுக்கு அடுக்குகளாய்
நின்று போகும் அசுர வண்டிகளே!
அறிவு இருக்கிறதா
என் மேல் ஊர்ந்து போக
உன் மனம் வலிக்கலையா!
இருபது முப்பது வண்டிகளுக்கு
இடம் அளித்தேன்.
என் மீது செல்ல!
இரண்டாயிரம் மூவாயிரம்
வண்டிகளை அனுப்பி வைக்கிறார்கள்
என்னை கொல்ல!
வலி என்னும் அரக்கன்
என்னை சிறை பிடித்தான்.
வழக்கத்திற்கு மாறாக
வண்டிகளை என் மீது
அமரவைத்தான்!
உயிர் இல்லை
என்பது எனக்கு சாபம் இல்லையா?
அதிக வண்டிகளை என் மீது
செலுத்துவது உங்களுக்கு
பாவமாய் இல்லையா?
பத்தொன்பாதம் நூட்றாண்டு
பாதை போல்
இருந்தால் நல்லது!
பழையபடி என் மீது
வண்டிகளை செல்ல
குறைத்தால் வல்லது!
என்னைச் சுற்றி சுற்றி
நடக்கிறது சோகங்களாய்.
என் மீது செத்து செத்து
விழுகிறார்கள் பவாங்களாய்!
பழைய காலம் வருமோ
என்று பரிதவிக்கிறேன்!
வந்தால் உங்களுக்கும்
வசந்தம் பிறக்கும் என்று
வழி மேல் விழி வைக்கிறேன்.!