கடல் (தாண்டி) வாழ் உயரினங்கள்...
இறைவன் எழுதிய
கவிதைகளில்,
இரங்கல் கவிதைகள்
நாங்கள்...
வாழ்வின் இனிமையான
பொழுதுகளையெல்லாம்
தனிமைக்கு
திண்ணக்கொடுத்தவர்கள்...
மனைவியின்
பிரசவத்தின்போது
மருத்துவமனை
சன்னல் பிடித்து
அழுகின்ற சுகம்கூட
பறிபோனது
பணவேட்டையில்...
"குழலினிது யாழினிது
என்பர்தம் மக்கள்
மழலைச்சொல் செல்போனில்
கேளாதவர்" - எங்களின்
புதுக்குறள்.
மனைவியின் வளைகாப்பு,
குழந்தையின்
பொக்கைவாய் சிரிப்பு,
சகோதரன் திருமணம்,
நண்பனின் மரணம்,
இப்படி எதுவுமே
நிகழ்காலங்களில்
கிடைப்பதில்லை எங்களுக்கு,
இளகியமனம்
படைத்த இறைவா...
மரணத்தை மட்டுமாவது
எங்கள் மண்ணில் கொடு!!!...