கலாம் நினைவிடம் எப்படி இருக்க வேண்டும்

கலாம் நினைவிடம் எப்படி இருக்க வேண்டும்? தேசிய அளவில் போட்டி நடத்த முடிவு
------------------------
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக தேசிய அளவில் போட்டி நடத்த டி.ஆர்.டி.ஓ முடிவு செய்துள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அங்கு அவருக்கான நினைவிடம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தமிழக அரசு சார்பில் 1.36 ஏக்கர் நிலமும் இதற்காக மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலாமின் உடல் புதைக்கப்பட்ட இடம் சரியாக பாராமரிக்கப்படாமல் அசுத்தமாக இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது.

இதையடுத்து அங்கு சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலை அப்துல் கலாமின் நினைவிடம் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக அனைவரின் கருத்துகளையும் அறிவதற்காக தேசிய அளவில் போட்டி நடத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பு விரைவில் டி.ஆர்.டி.ஓ சார்பில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (5-Jan-16, 9:25 am)
பார்வை : 69

சிறந்த கட்டுரைகள்

மேலே