மகாத்மா காந்தி பெயரில் ரவுண்டா அமைத்து கவுரவித்த இஸ்ரேல்

இஸ்ரேலின் முக்கிய நகரில் உள்ள ரவுண்டாவுக்கு மகாத்மா காந்தியின் பெயரை வைத்து அந்நாட்டு அரசாங்கம் கவுரவித்துள்ளது.


இஸ்ரேல் நாட்டிலுள்ள சிறிய நகரம் கிர்யாட் காட்(kiryat gat) இந்த நகரம் கட்டமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் அந்நகரத்திலுள்ள ரவுண்டாவிற்கு மகாத்மா காந்தியடிகளின் பெயர் சூட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

இந்த புதிய ரவுண்டானா திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

இது தொடர்பாக அப்பகுதியின் மேயர் அவிராம் தகாரி கூறியதாவது, இரு நாட்டு மக்களுக்குமிடையே உள்ள நல்ல நட்பை வெளிக்காட்டும் சின்னமாக இது திகழ்கிறது.

மேலும் இரு நாட்டின் அரசியல் ரீதியான நல்லுறவையும் இது பிரதிபளிக்கிறது என்று கூறியுள்ளார்.

இப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி ;லங்கா சிறி

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (5-Jan-16, 9:27 am)
பார்வை : 72

சிறந்த கட்டுரைகள்

மேலே