காதலிப்போம் வாழ்க்கையை...

வாழ்க்கையைக் காதலிப்போம்
நாம் விரும்புவது கிடைத்தாலும்
வாழ்க்கை வேறு வழி போனாலும்
இருக்கும் வரை பார்த்திடுவோம்

வாழ்க்கையைக் காதலிப்போம்
வேண்டியது கிட்டாதாயின்
கிடைத்ததை வேண்டி நிற்ப்போம்
மனமதை மாற்றி அமைப்போம்

மண் ஒரு பிடி எடுத்து
உதிர்த்திடுவோம் கைகளிலே
இது தான் நாம் என்று
உணர்ந்திடுவோம் எந்நாளும்...

ஆசைகள் அலை மோத
ஆவியும் துடி துடிக்க
அனலில் இட்ட புழுக்களாய் நாம்
பரிதவிப்பது என்று நிற்கும்?

பஞ்ச பூதங்களும் உடன் இருக்க
பால் கேட்டு அழத் தெரியாபருவத்திலும்
பாலூட்டும் அன்னை கொடுத்து
பார்த்துகொள்ளும் பூமி மேல்
நம்பிக்கையோடு அடி வைப்போம்...




எழுதியவர் : shruthi (12-Jun-11, 10:15 am)
சேர்த்தது : shruthi
பார்வை : 479

மேலே