தாயே
ருத்ர காளியே
ஆயிரம் கோடி பொன் வேண்டும்
அள்ளி வழங்கும் கை வேண்டும்
பாரோர் புகழ வாழ வேண்டும்
நயமுடன் பலபன் உனக்கென
புனைந்திடல் வேண்டும்
நாவினில் கலைமகள்
குடிகொள்ள வேண்டும்
இல்லத்தில் லட்சுமியவள்
நிறைந்திடல் வேண்டும்
நெஞ்சத்தில் வீர காளியாம்
தாயே நீயே என்றும் உதித்திடும்
வரம் வேண்டும் என் தாயே !