ஜன்னலோரம்-அருணை ஜெயசீலி
................................................................................................................................................................
தெரியாத்தனமாய்
ஜன்னலோரம் அது..
நிற்கத் தெரியவில்லை; நிறுத்தினோம்..
ஒரு நாள் பருகும்
ஒரு கை நீர் மட்டும்..
எதிரிகளுக்குப் பஞ்சமே இல்லை..
வாண்டு தொடங்கி வண்டு வரை..
விரட்டினோம் முறை போட்டு..
நல்ல நாளில் பூஜை போட்டு
கொண்டு வருகிறோம் அதை..
ஒரே ஒரு பயிரில் காய்த்த
ஒரே ஒரு நெற்கதிர்..!