சூன்யத்தின் மறுபக்கம்

இருமுறை
தூக்கு போட்டும்
தப்பித்துக் கொண்டவர்....
ஒருநாள்
திடும்மென காணாமல்
போனவர்....

ஏனோ அவரை
நாங்கள் ஒருபோதும்
தேடவேயில்லை....

இன்றும் மிகப் பெரிய
முகப்பறையில்
தனியாக, புகைப்படமாய்
தொங்கிக் கொண்டிருக்கும்
தாத்தா-
எனக்கு சொல்ல
ஒன்றுமில்லை என்பது போல
பார்க்கிறார்...

நாங்களும் கேட்காத
காதுடன்தான்
அறையைக் கடக்கிறோம்...

அறை முழுக்க
நிரம்பிக் கிடப்பதாக
தோன்றுகிறது
சூன்யத்தின் வெளிச்சம்
அல்லது தாத்தாவின் நீட்சி........

கவிஜி

எழுதியவர் : கவிஜி (8-Jan-16, 4:32 pm)
பார்வை : 94

மேலே