பொங்கல் வாழ்த்து அட்டை
பத்து பைசா ..
பொங்கல் வாழ்த்து அட்டை
அஞ்சு வாங்க ..
வழக்கமாய்த் காசு தரும் அப்பா ..
அந்த வருஷம்
ஒரு ரூபா வாழ்த்து அட்டை
பத்து வாங்கிக்கோன்னு
கொடுத்தபோது ..
அதிலுள்ள ஜிகினாக்கள்
அப்படியே மனதில் ஒட்டிக்கொண்டன..
அடுத்த வருஷம்
கொடுப்பதற்கு ..
அவர் இல்லாமல் போனபிறகு ..
அவையெல்லாம் உதிர்ந்து போயின
என் மனதை விட்டு ..
அட்டையாக அப்பாவின் அன்பு மட்டும்
என்னோடு ஒட்டிக்கொண்டு
உயிர் வாழ வைக்குது
வாழ்த்தும் அட்டையாக .. என்னை !
பி.கு :
(அப்பா எங்கோ
வாழ்த்து அட்டையின்றி
வாழ்த்திக்கொண்டிருக்கிறார்னு
முடிங்க சார் கவிதையை.
..
என்று உண்மையில் நடப்பதை
எழுதச் சொன்னது என்
அன்பு நண்பர் ..
படைப்பாளி கலாரசிகன் கண்ணா !)