பரிமாற்றமா

என்று பார்த்தானோ அவளை
அவனிடம் மென்மையின்
உணர்வு பரவியது
அதுவரை கல்நெஞ்சனாய் அவன் .
நான், என்னை, என்றில்லாது
மனிதன் என்ற உணர்வு
காதல் எனும் பிரபஞ்சத்தால்
கட்டுக் கோப்புக்குள் அவன்
இப்போது அவனும் மென்மையானவன்
பாசமுள்ளவன் பக்குவம் நிறைந்தவன்
இது அவள் தந்த மாற்றமா /
காதலின் பரிமாற்றமா/
உண்மையில் காதல் வெறுமையானது அல்ல
கனம் கொண்டது ,மதிப்பு மிக்கது
அதை உணரும் போது
அவனுக்குள் சிறகுகள் முளைத்து விட்ட
மகிழ்ச்சி ஆரவாரம்
காதலிக்கவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் போல்
இத்தகைய காதல் தான்
மானசீகக் காதல் தெய்வீகக் காதல்
மானிடர் உள்ளவரை
புனிதமான காதல் தொடரட்டும்
ஒரு மனிதனை முழு மனிதனாக்குவது அன்பு ஒன்றே

எழுதியவர் : பாத்திமாமலர் (9-Jan-16, 5:30 pm)
பார்வை : 68

மேலே