போராட்டம் தான் வாழ்க்கையும் ...

உயரம் தான்
மதிற்சுவர்
கதவு கடந்தே
வா... காற்றே
அழுக்கு தான்
குளத்திலும்
மழை குளித்தே
வா... வெண்ணிலவே
கரைக்குள் தான்
பெருங்கடல்
துணிந்து
வா... பேரலையே
பக்கம் தான்
தொடுவானம்
பறந்து
வா.. சிட்டுக்குருவியே
போராட்டம் தான்
வாழ்க்கையும்
பிறந்து
வா... மழலையே