வாழக் கற்றுக்கொடு

உன்னை எனக்குள்
உயிர் கரைக்கிறேன்
ஆயுள் முழுக்க
உன்னை
மனம் சுமக்கிறேன்
உன் சேலைத் தலைப்பில்
வியர்வை துடைக்கிறேன்
என் தேசம் முழுக்க
உன் வாசம்
சுவீகரிக்கிறேன்
உதடுகளின் ஈரத்தால்
உன் அழகு குளிக்கிறேன்
என்னுயிரின் பெண்ணுடலே
வாழ்க்கையை
அருகிருந்து
வாழக் கற்றுக் கொடு...