உனக்காய் எனக்காய்
..."" உனக்காய் எனக்காய் ""...
அன்பாய் அழகாய்
கவியாய் இனித்தாய்
கனிவாய் சிரித்தாய்,,,
ஆழமாய் விதைத்தாய்
ஆசையாய் துடித்தாய்
ஆவலாய் களித்தாய்,,,
மலராய் கொடியாய்
மெய்யாய் பொய்யாய்
தீயாய் தகித்தாய்,,,
கண்ணாய் மணியாய்
கவிதை படைத்தாய்
தமிழாய் பொழிந்தாய்,,,
விழிப்பாய் செழிப்பாய்
கலையாய் சிலையாய்
வனப்பாய் இருந்தாய்,,,
எறும்பாய் நகர்ந்தாய்
கரும்பாய் பிழிந்தாய்
கனவாய் கலந்தாய்,,,
தவிப்பாய் இருந்தாய்
தனியாய் வந்தாய்
துணையாய் நின்றாய்,,,
தென்றலாய் குளிர்ந்தாய்
மின்னலாய் மிளிர்ந்தாய்
இடியாய் அணைத்தாய்,,,
கிழித்தாய் இணைத்தாய்
படித்தாய் முடித்தாய்
பிணியாய் சிறைபிடித்தாய்,,,
செவ்வாய் இதழாய்
பூவாய் மலர்ந்தாய்
சுவைத்தேன் தந்தாய்,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...