விளையாட்டு

தொட்டுப்பார்த்தால்
சுட்டுவிடும் கோடைவெயில்
மணற்பரப்பில்,
நீர் சுமக்கும்
ஒட்டகமும் ஒவ்வொன்றாய்
மயங்கி விழ,
இன்னும்
சோர்ந்து போகாமல்
சேர்ந்து
விளையாடிக்கொண்டிருக்கின்றன
உன் நிழலும்,
என் நிழலும்.

எழுதியவர் : S.S.அருண் (10-Jan-16, 3:02 pm)
Tanglish : vilaiyaattu
பார்வை : 82

மேலே