மனிதனே மகானாகிறான்
![](https://eluthu.com/images/loading.gif)
மனிதனே மகானாகிறான்!
உள்ளீடற்ற
மூங்கில்களே….
புல்லாங்குழல்கள்
ஆகின்றன!
உள்ளீடற்ற
நீலவானமே
நட்சத்திரங்களையும்
கோள்களயும்
தாங்குகிறது!
உள்ளீடற்ற
நாணல்களே
ஆறுகளின் கரையை
காக்கின்றது!
உள்ளீடற்ற
வெங்காயமே
கண்ணீரையும்
வரவழைக்கின்றது!
உள்ளீடற்ற
மனங்கொண்ட
மனிதனே
மகானாகிறான்!
--- கே. அசோகன்.