அன்றாடப் பொருள்கள்

என்னுள் என்றும் வருவாய்
என்னை எடுப்பாய் காட்ட…
*
தலையாயக் கடமை கைக்கொள்வாய்
தன்முனைப்பு தன்னை தற்காக்க …

**
கலைத்தாலும் கவலையில்லை நீயிருக்க
கலைந்த தலைமுடியை சீர்த்திருத்தும்
சீப்பே ...
******

நுரையோடு தேகத்தில் விளையாடுவாய்
நிறைவாய் என் காலைப் பொழுதைக் துவங்க...
*
புத்தம்புதிய பொழிவைக் கொடுப்பாய்
சுத்தமது நித்தம் கொடுக்கும்
சோப்பு …..
********
தலைக்கு எனத் தயாரித்தப் பூவே
ஆயிரங்கள் வகையில் வலம்வரும் பூவே
குளியலில் மட்டும் அணியும் பூவே
குளியும் முன்னே கலையும் பூவே
நறுமணமிகு நான் உபயோகிக்கும்
ஷாம்பூவே ….

***********

காலைப் பொழுது உன்னுடன் ஆரம்பம்
கண்ணாடி முன்னே
வார்த்தை உதிக்கும் வாயிக்கு
நீ அவசியம் ...
ஆலும் வேலும் என எங்களில் ஆரம்பித்த
பல் தூரிகை…

*****

நீயின்றி ஒரு நாளும் எங்களுக்கு நகராது
உன் நினைவின்றி கொள்ளாது எங்கள் தொடர்பு…
நாளும் நீ கொள்ளும் வளர்ச்சி
நாவில் சொல்ல இயலாது அதுக்கொள்ளும் தளர்ச்சி ….
*
நீயே என் நாட்குறிப்பு..
நீயே என் அலாரம்…
நீயே என் சாலைக்காட்டும் வரைப்படம்…
என் தேவைகள் பலவும் உன்னுள் அடக்கம்
நீயில்லையேல் கொள்வேன் முடக்கம்
**
இணையமும் என் கையடக்கம்
இனியேன் வாழ்வுன்னுடன் துவக்கம்
***
விற்றக் காற்றுக்கு விலை தரும் பொருளே…
என் ஆசை கையடக்கத் தொலைபேசியே….
*****
கண்ணான காவலன்
தோற்றத்தை மாற்றுபவன்
தனிப் பாணியில் காட்டுபவன் …
*
கிட்டப்பனையும் நெட்டப்பனையும்
குழியும் குவியுமாய் தவிர்ப்பவன்…
**
தோரனனைக்கும் எனக்கு
கண்ணுக்கு தோழனாய் விளங்கும்
கண்ணாடி….

*****

பல் இல்லாமல் கடிக்கும்
பழக பழக அது படியும்
நாளாக நாளாக அதுவும் தேயும்...
*
வகைகள் பலவிதம்
ஆசைகள் அதனுடன்
நாளும் மாறுப்படும்...
**
ஓடும் வாழ்வும் உன்னோடு ஓடும்
கல்லை முள்ளை வெல்லும் …
என் காலணி
*****

- செல்வா

எழுதியவர் : செல்வா (11-Jan-16, 9:57 pm)
பார்வை : 74

மேலே