ஆனந்தம்
உன் கண்கள் ஆனந்தம்
அந்த கண்களுக்குள் நான் நிறையும் காட்சி ஆனந்தம்
உன் கைகள் ஆனந்தம்
அந்த கைகளுக்குள் என் முகம் புதையும் நிமிடம் ஆனந்தம்
உன் பார்வை ஆனந்தம்
அந்த பார்வைக்குள் நான் கரையும் வேகம் ஆனந்தம்
உன் நினைவு ஆனந்தம்
அந்த நினைவில் நம் காதல் ஆனந்தம்