காதல் காற்று
காதலெனும்
மெல்லிய காற்று
இதை சுவாசிக்காதவர்க்கள்
இவ்வுலகில்
யாருமே இருக்க முடியாது
ஐந்தறிவு ஜீவன் முதல்
ஆறறிவு மனிதன் வரை
சிலர் இதை சுவாசித்து
உயிர் வாழ்கிறார்கள்
சிலர்
இதை சுவாசித்து மரணிக்கிறார்கள்
சிலருக்கு இதுவே
மூச்சிக்காற்று
இன்னும் சிலருக்கு
இதுவே உயிரை கொல்லும்
விஷக் காற்றாய் மாறிவிடுகிறது
இதை சுவாசிக்க யாரும்
மறுப்பதில்லை
மறப்பதும் இல்லை
இருந்தும் எப்படி
சிலருக்கு மட்டும் மரணம் .!
இது விதியின்
விளையாட்டா
காலத்தின் கட்டாயமா
இல்லை
இது விதியின்
விளையாட்டும் அல்ல
காலத்தின்
கட்டாயமும் அல்ல
சுவாசிக்க முடியாதவர்கள்
சுவாசிப்பதாலும்
சுவாசிக்க தெரியாதவர்கள்
சுவாசிப்பதாலும்
இந்த மரணம் நேரிடுகிறது .
" ஏனோக் நெஹும்"