”சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ”

நர்தகிக்குத் தனது தாய் மூலம் அந்தச் செய்தியைக் கேட்டவுடன் மிகவும் சந்தோசமாக உணர்ந்தாள்.

தான் வாழ்நாளே இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்து இருந்தது போல உற்சாகமானாள்.

தான் கற்றக் கலையின் தந்தை பரதமுனிக்கும் அதைக் கற்றுக்கொடுத்த குருவுக்கும் மனதார நன்றி சொல்லிக் கொண்டாள் .

அந்த சமஸ்தான அரண்மனையில் அவள் நாட்டியம் நிகழ்ச்சி இது முதன் முறையல்ல .மாண்புமிகு மன்னர் கையால் பல முறை தனிப்பட்ட முறையில் பாராட்டுப்பெற்று நர்தகிக் கௌரவப்படுத்தப்பட்டதைப் பல சமஸ்தானங்கள் அறியும்.ஆனால் நம் தாய் நாட்டின் கல்கத்தாவைச்சேர்ந்த ஒரு சிறந்த யோகியின் முன் நடனமாடும் பாக்கியமும் அவரின் கண்களின் மூலம் பெறவிருக்கும் ஆசிர்வாதமும் ,தன் வாழ் நாளில்கிடைத்தற்கு அரிய பாக்கியம் என நினைத்தாள்.

நர்தகி நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் ஆகிய நடனத்தின் முப்பெரும் பிரிவுகளில் தேர்ச்சிப் பெற்றவள் கீதம், அபிநயம், பாவம் இவைகளைக்கொண்டுதாளக்கட்டு விடாமல் ஆட வேண்டியவை நிருத்தமாகும். நடனமாகிய நிருத்தமும் அபிநயக் கலையால் கருத்துக்களை வெளிப்படுத்தும்நாட்டியமும்கலந்துத் திகழும் கலை நிருத்தியம் எனப்படும். பாடலின் பொருளைக் கை முத்திரைகளினாலும் தாளத்தினைப் பாதங்களைத் தட்டிஆடுவதாலும்பாவத்தினை முகத்தினாலும் கண்களினாலும் வெளிக்கொண்டு வரல் நிருத்தியமாகும். ரஸ பாவங்களைக் கூட்டித் தாளக்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிக் கருத்தைப் புரிய வைப்பதே நிருத்தியமாகும்.இவற்றிலெல்லாம் அவள் கரைகண்டவள் .

அந்த ஒரு நாள் நாட்டியக் நிகழ்சிக்காக மிகக்கடினமான பரதநடனத்தின் பாவங்களையும் நவரஸங்களையும் பொருட்கள் மற்றும் செயற்பாடுகளையும் விளக்கும் அஸம்யுத ஆயத்தம் ஒற்றைக் கை முத்திரைகள் மற்றும் ஸம்யுத ஹஸ்த்தும் ,இரட்டைக் கை முத்திரைகள ஆகிய.சகல பயிற்சிகளையும் மேற்கொண்டாள் நர்த்தகி . அந்த நாட்டியத்திற்கு வேண்டிய பாடலைத்தேர்வு செய்யும்போது அப்போதைய வழக்கத்தில்முறைப்படுத்தப்பட்ட பரதத்தின்புஷ்பாஞ்சலி, பதம், வர்ணம் ஜாவளி, தில்லானா போன்ற சிருங்காரமே பிரதான ரஸமாகக் கொள்ளப்பட்டது. சிருங்காரரஸத்திலும் நாயக நாயகிப் பாவத்தில் இறைவனுக்குப் பதிலாக

ஆனால் நர்தகி பூர்வஜன்மத்தில் கம்சனின் அவையில் மந்திரியாக இருந்த கிருஷ்ணரின் பக்தர் அக்ரூரர் சத்தியபாமாவைஆறுதல் செயல்ஒன்று செய்யப்போய்க் கிருஷ்ணரால் பெற்ற சாபத்தில் அடுத்தப் பிறவியில் பூலோகத்தில் பார்வை இல்லாதவறாகப் பிறந்த சூர்தாசர் வல்லபாச்சாரியாரிடம் கற்றுக்கொண்ட “புஷ்டிமார்க்கம்’ அடிப்படையில் பாடியச் சூரசாகரம் பக்திக் கீர்த்தனைகளை நர்த்தகி மிகவும் விரும்புவாள். மேலும் சூர்தாசரைப்போலவே கிருஷ்ணனின் குழந்தைப் பருவத்தைப் போற்றி விரும்பி வருபவள் நர்தகி. அவளும் சூர்தாசரைப் போலவே கண்ணன் எப்போதும் வளர்ந்து பெரியவனாவதை விரும்பமாட்டாள்.மிகுந்த சேஷ்டைகள் செய்யும் பாலகிருஷ்ணன்தான் அவளுக்கும் பிடிக்கும் எனவே சூர்தாசரின் 25 ஆயிரம் பாடல்கள் ஓர்அற்புதமான பாடலைத் தேர்வு செய்தாள் .அதற்காகச் சமஸ்தானத்தின் சிறந்த நட்டுவாங்கம், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகியஇசைககலைஞர்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டாள்

நர்தகி அன்று மிகுந்த சந்தோசத்தில் அதிகாலை எழுந்தாள்.அவள் வசிக்கும் வீட்டின் மாடத்தில் இருந்து பார்த்தால் மாலை ஆடவிருக்கும் அரசவையின்ஆடலரங்கம் தெரியும் .அதை இங்கிருந்தே வணங்கிகொண்டாள் .

மாலை அரண்மனையின் ஒரு பகுதியில் மிகுந்த பரவசத்தில் இருந்த நர்தகிக்கு நாட்டியத்திற்காகப் பிரத்யோகமாகத் தைக்கப்பட்டவண்ணப்பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்துகொண்டு தயாராக இருந்தாள்

அப்போது அரண்மனை நிகழ்சியை மேற்பார்வையிடும் ஒரு சேடி வந்தாள் , மன்னர் உன்னைத் தயாராக இருக்கச் சொன்னார்கள் .அந்தக்கல்கத்தாசுவாமிகள் விடைப் பெற்று அவர் ஓய்வறைக்குப் போன பிறகு நீ ஆடலரங்கம் வரலாம் என்று சொல்லி விட்டு அரண்மனைக்குள் போகத்திரும்பினாள் .

நர்தகி மட்டுமல்ல அங்கிருந்த அவளுக்கு அலங்காரம் செய்தச் சேடிகளும் அவள் தாயாரும் அதிர்ந்துப் போனார்கள் .

நர்த்தகியின் தாய் அறிவிப்பைத் தந்த அந்தப் பெண்ணை நோக்கி ஏறக்குறைய ஓடிக் குறுக்கே சென்று தடுத்து , அம்மா ஒரு நாழிகைப் பொறுங்கள்என்னசொன்னீர்கள் கல்கத்தா சுவாமிகள் ஓய்வரை போகிறாரா ? ஏன் அவர் நாட்டியம் பார்க்க அனுமதியில்லையா? என்றால் மூச்சிரைக்க

அதற்கு அந்தச் சேடிச் சொன்ன பதில் எல்லோரையும் மேலும் நிலைகுலைய வைத்தது விட்டது .

”தேவதாசியின் நட னத்தைக் கண்டு களிப்பது ஒரு துறவிக்கு அழகல்ல. அது தர்மத்த்திற்கு விரோதமானது” என்று அவர்மன்னரிடம்விடைபெற்றுக்கொண்டார் என்று இடியாய் ஒரு பதிலை இறக்கிவைத்து விட்டாள்

நர்தகி இது நாள் வரை ஒரு தேவதாசிக் குலத்தில் பிறந்தவள் என்பதற்காக வருந்தியதே இல்லை.மன்னனுக்குச் செய்யும் சேவைஇறைவனுக்குச்செய்யும் சேவையாகவே சந்தோசமாக நினைத்து இருந்தாள் ஆனால் இதைக் கேட்டவுடன்தான் தான் ஒரு தேவதாசியாகப்பிறந்ததற்காக வெட்க்கப் பட்டாள்.தன்னுடைய முகத்தை அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் பார்க்கும் போது அவளுக்கு அருவருப்பாகவும் இருந்தது .

அவள் கண்களிருந்துக் கண்ணிர் ஆறாய்ப் பெருகியது.

தாய் வந்து தேற்றினாள் .அவள் தோளில் சாய்ந்து வாய்விட்டு அழுதாள் நர்தகி

அவள் தாய் இந்த இப்படி ஒரு ஏமாற்றத்தில் தன் மகள் அழுது வருந்துவதைப் பார்த்ததே இல்லை .

நான் போக மாட்டேன் என்னால் ஆட முடியாது என்று அரற்றினாள்.

ஏன் அம்மா என்னைப் பெற்றாய் என்று கதறினாள்?

விதி மகளே நாம் பெற்ற வரம் இது என்று சோல்லிக்கொண்டு தாயும் அழுதாள்.

கூடியிருந்த எல்லோரும் செய்வதறியாதுத் திகைத்தனர்.

நர்தகி ஆடலரங்கம் போகாவிட்டால் அரசரின் கோபத்திற்கும் தண்டைனைக்கும் தப்ப முடியாது .

அங்கிருந்த பெண் ஒருத்தி இதை நர்தகியின் தாயின் காதோரம் மெல்லச் சொன்னாள்.

சுதாரித்துக்கொண்ட நர்தகியின் தாயார் , மகளைத் தேற்றத் தொடங்கினாள்

மகளின் முக ஒப்பனைகள் கண்ணீர் பெருக்கத்தால் கலைந்து கொண்டு இருந்தது.

நம் விதி இதுதான் மகளே ,கடவுள் மேல் பாரத்தைப்போட்டுப் போய் ஆடிவிட்டு வந்து விடு என்றாள் .

மன்னனின் கோபத்திற்கு ஆளானால் என்ன ஆகும் என்று என்பதை நர்தகியும் அறிவாள்.

தன்னால் மற்றவர்ளுக்கு துன்பம் வரக்கூடாது என்பதால் தனது முடிவை மாற்றிக்கொள்ளச் சம்மதித்தாள்

ஆனால் தான் ஏற்கனவே முடிவு செய்து அயராது பயிற்சி செய்த சூர்தாசரின் கீர்த்தனையை பாட விருப்பமில்லாமல் அவரின் வேறு ஒரு கீர்த்தனையை அப்போது தேர்வு செய்தாள் .

ஆடலரங்கம் போகும் முன் மெல்லச் தனக்குள் சொல்லிக்கொள்வதும் முணுமுணுத்துக் கொள்வதும் ஆடல் மங்கைகளுக்கு வழக்கம்.

ஆனால் தன் மகள் சொல்லிக்கொண்டு இருக்கும் பாடல் வரிகளை உன்னிப்பாக கேட்கும் போது வேறு ஏதோ ஒரு பாடலை தேர்வு செய்து விட்டாள் என்பதை முடிவு செய்துவிட்டாள் என்பதை அவள் தாய் அறிந்தாள் .

இந்தத் திடீர் மாற்றம் முன்னைவிட அவள் தாயிற்குப் ஒரு வகையில் பயத்தைத் தரமால் இல்லை.ஆனால் நிகழ்சி நடக்க வேண்டும் ,தண்டனையிலிருந்து எல்லோரும் தப்பிக்க வேண்டும் என்பது மட்டும் இப்போதைக்கு அவசியம் என்பதில் உறுதியாக இருந்தாள் .

சரச் சரவெனெப் பட்டுத்துணியின் ஒளியும் கட்டியிருந்த சலங்கையும் அதிர ஆடலரங்கம் போகத் தயாரானாள் .

நர்தகியின் காற்சலங்கை அன்று மட்டும் அவளைவிடவும் அமைதியற்று இருந்தது

இரண்டு தோழிகள் , ஒரு பட்டுத் துணியால் நர்தகியைப் போர்த்தி ஆடலரங்கம் அழைத்துச் சென்றனர் .


ஆடலரங்கம் ஏறும் முன் முதலில் மன்னரையும் அந்தச் சபையினரையும் வணங்கினாள் .மேடையையும் தொட்டு வணங்கினாள்

அவள் கண்கள் அப்போது ஓர் இருக்கையைத் அந்த சபைக்குள் தேடியது .

ஆம் அது அந்த யோகி, இதுவரை அமர்ந்துச் இந்த சபையைச் சிறப்புச் செய்த இருக்கை அது .அதையும் வணங்கினாள் .

அடுத்தக் கணமே அவளையும் அறியாமல் கண்கள் குளமாயின.

மனதுக்குள் இறைவனையும் , குருவையும், சூர்தாசரை உதவுமாறு ஒரு சேர வேண்டிக்கொண்டாள்.தான் உணர்வு வயப்பட்டு, அந்த யோகியை இந்த கீர்த்தனை மூலம் வருந்த வைக்காதிருக்க உதவிடுமாறும் மனம் உருக வேண்டிக்கொண்டாள்.

எங்கிருந்து அப்படிப் பலம் தனக்குள் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை ?

இயற்கை தான் கொடுக்க வேண்டிய செய்தியை யார் மூலமாவது எலோருக்கும் தந்து கொண்டே இருக்கும் அன்று அந்த யோகிக்கு நர்த்கி மூலம் அப்போது வெளிப்படத் தொடங்கியது

அந்த யோகியின் ஓய்வறை நோக்கித்திரும்பிய நர்தகி , நட்டுவாங்கம், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் எதோடும் கலக்காமல், தனது கணீர்க் குரலில் பாடத் தொடங்கினாள் …

‘பரமனே! சமபாவம் என்பதையே இயல்பாகக் கொண்ட நீ,

பாவம் செய்தவள் இவள் என்று என்னை ஒதுக்கிட நினைக்கலாமா?

இரும்புத் துண்டு ஒன்று, இறைவனின் பதுமையில் பஞ்ச உலோகங்களில் ஒன்றுமாக அமைகிறது.

பிறிதொரு இரும்புத் துண்டோ பிராணிகளைக் கொல்லும் பாவியின் கைவாளாகப் பாதகம் புரிகிறது.

ஆயினும், இரண்டும் ரஸவாதியின் திறனால் மாசற்றப் பொன்னாய் மாறுவதையும் நீ அறிவாய்!

பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே!

சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?

காளிந்தி நதியின் புனித நீரும், கழிகாலில் வழிகின்ற இழிநீரும் ஒரு நிலையில் இனிய கங்கையில் இணைகின்றபோது

ஏற்றம் பெறுவதை நீ ஏற்றுக்கொண்டவன் அன்றோ! பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே!

பரமனே, சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ?’

அவள் குரலின் உச்சமும் வார்த்தைகளும் அந்த சபை தாண்டி ,கம்பீரமான அந்த யோகியின் என்று மூடிய ஓய்வறைக்குள் கதிரவனின் கதிர்களைப்போல சீறிப்பாய்ந்தது.

அது பாடலா ஒரு பெண்ணின் கதறலா என்பதை அங்கிருப்பவர் அறிந்து கொள்ளும் முன் மேடயில் மயங்கிச் சரிந்தாள் நர்தகி. அவையினரும் ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டனர்.

ஏற்கனவே நர்தகியின் அடிபட்ட மானின் கதறலாய் பாடிய கீர்த்தனைகளின் பாதிப்பிலிருந்து மன்னரும் ஏனைய சபையினரும் விலகும் முன்,

யாரும் எதிர்பாராவிதமாக அந்த சபைக்குள் வேறு அதிர்ச்சி சம்பவம் நடந்தது

ஓய்வறையிலிருந்து நர்தகியின் பாடல் வரிகளால் தைக்கப்பட்ட யோகி , நேரே சபைக்கே வந்து விட்டார்.

வந்தவர், யாரையும் பார்க்கவில்லை. நேராக நாட்டியம் நடைபெற்ற ஆடலரங்க மேடைக்கு அருகே விரைந்து சென்றார்.

அங்கு ஆடலரங்கத்தில் கண்ணீர் மல்க சரிந்த நர்தகியை நோக்கி தோழிகள் மேடைக்கு ஓடிக்கொண்டு இருந்தனர்

இயல்பிலேயே ஒளிவீசும் அந்த யோகியின் கண்கள் கண்ணீரால் பளப் பளத்தது, அங்கு பாடிய நர்தகியை அணங்கை அன்னையைக் காண்பதுபோல் அன்புடன் நோக்கி,

”தாயே!நான்குற்றவாளி ஆகிவிட்டேன். இங்கு வராமலே இருந்து, உன்னை அவமதித்த பாவத்துக்கு ஆளாகி இருப்பேன். ஆயினும் தாயே… அதிர்ஷ்டவசமாகஉன் சங்கீதம் என் அறிவை விழிப்புறச் செய்துவிட்டது!” உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை?” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

மொத்த சபையும் எழுந்து நின்று அந்த வீரத்துறவியின் செய்கையால் கைகூப்பி வணங்கியது.

இயற்கை அன்று அந்த யோகிக்கு, நர்தகி மூலம் ஓர் அறச்செய்தியை வழங்கியது அன்று !

இதை உருவாக்கியவனின் உள்ளச்சுமை :

நாம் எல்லோரும் அறிந்த யாரலும் மறக்க முடியாத ஒரு வீரத்துறவிக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவம் இது .ஆனால் ஒரு வரியில் சொன்னால் ஒரு நாட்டிய நங்கையிடமிருந்து வீரத்துறவிக்கு இயற்கை ஒரு செய்தியை சொல்லிய நிகழ்ச்சி அவ்வளவுதான் .ஆனால் வெகு நாளாய் பெயர் கூட அறியாத ( நர்தகி உண்மை பெயர் இல்லை) அந்த நாட்டிய மங்கையின் மனதின் உணர்வுகளை மொழி பெயர்க்க ஆசைப்பட்டேன் .அவள் பிறப்பால் எல்லோரும் சமம் என்ற சூர்தாசர் கீர்த்தனை மூலம் என் மனதில் வெகு நாள் தங்கியிருந்தது.அவளே இதை எழுதுமாறு தூண்டியது போல இருந்தது.( ஒரு வேளை அவளே நானாக பிறந்தேனோ என்ற அதீத கற்பனையா ? தெரியவில்லை. ) அந்தப் பெண் பற்றியப் புனைவால் அந்த வீரத்துறவிக்கும் அவர் இந்த மாபெரும் இந்திய சமூகதிற்கு செய்த உழைப்புக்கும் எந்த ஒரு பங்கமும் வரக்கூடாது என்பதில் நான் மிக கவனமாக இருந்திருக்கிறேன் .அதை மீறி யாருடைய மனதிலும் இந்த பதிவு நெல்முனையளவும் தவறு என்று நினைத்தால் உடனே இங்கிருந்து நீக்க சித்தமாக இருக்கிறேன் .)

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (13-Jan-16, 4:13 pm)
சேர்த்தது : krishnamoorthys
பார்வை : 127

மேலே