இயற்கையில் காதல் நினைவுகள்
யாருமில்லை அருகினிலே நேரம் மட்டுமே உடனிருக்க,
தனிமை எந்தன் கைப்பிடிக்க, வேண்டாம் போ என்று நான் தவித்திருக்க,
தாலாட்டும் இயற்கையில் உறைய சென்றேன்,
சுகமும்,மன மகிழ்வும் தர பல கண்டேன் இயற்கையிலே,
சுவையான குயிலிசை அவர் குரலினை உணர்த்த,
சட்டென்று முகம் மறைத்தேன் மரத்தின் பின்னே,
குயிலிசைக்கு தலை அசைத்த பூச்செடிகளை கண்டேன்
குரலுக்கு தலை அசைக்கும் என்னை நினைத்தேன்,
இலைகளை போகும் போக்கில் உரசும் காற்றை கண்டேன்
இதழ் மலர்ந்து சிரிப்போடு சண்டையில் கைப்பிடிக்கும் அவர் எண்ணம் கொண்டேன்,
உரசிய இலைகள் எழுப்பும் ஒலிக்கேட்டேன்
உள்ளங்கை பிடித்தவனுக்கு ம்ம் என்றுரைத்த நினைவை கொண்டேன்,
நினைவுகள் என்னை மகிழ்விக்க,
நினைத்தேன் நானே மணப்பெண்ணாய்,
பறவைகளும் பாட்டிசைக்க,
மரங்களும் மலர்த்தூவ,
காற்று பரிசளிக்க,
கடலும் வாழ்த்துரைக்க,
அவர் கைகோர்த்து நடந்தேன் அமர்தேன் மேகத்திலே .....!!!!