நான் ஒன்று கண்டு கொண்டேன் கஜல்

உன் இரு விழிகளிலும் இனிய ஒளி ஒன்று நான் கண்டு கொண்டேன்
உருகிடும் அந்த மெழுகொளிதான் உள்ளத்திலும் என்று தெரிந்து கொண்டேன்

உன் உதட்டினில் விரிந்திடும் வெண்ணிறப் புன்னகை கோட்டினிலே
வான் நிலவின் பிறை கீற்று ஒளியினை நான் கண்டு கொண்டேன்

காற்றினில் கலைந்தாடும் உன் அழகிய கரு நிற ஒளிக் கூந்தலிலே
போற்றி கவிஞர் பாடும் வான் முகிலின் அழகினைக் நான் கண்டு கொண்டேன்

தோளினிலே துவண்டு மிதக்கும் உன் வண்ணத் துப்பட்டாவினிலே
தென்றலோடு சேர்ந்து தூது வரும் ஆர்வத்தை நான் கண்டு கொண்டேன்

மெல்ல அடியெடுத்து நடந்து வரும் உன்னிரு மென்மைப் பாதங்களிலே
தோட்டத்து மலரெல்லாம் இதழ் தூவி வரவேற்பதை நான் கண்டு கொண்டேன்

இந்த அழகையெல்லாம் ரசிக்கும் என் தமிழ்க் கவி நெஞ்சினிலே
புதிய கவின் கவிதை ஒன்று மெல்ல நடந்து வர நான் கண்டு கொண்டேன் !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jan-16, 10:42 am)
பார்வை : 86

சிறந்த கவிதைகள்

மேலே