எனக்கான தேடல்

இணையாத இமைகளோடு
இவனின்
காலை
தினமும்
விடிகிறது.....!

சிறகிழந்த
பறவை.....
துடுப்பை தவறவிட்ட
படகு.....
கரை சேர
கடின
மனசோடு
காலங்களை
அணைக்கிறேன்.....!!

ஆழக்கடலின்
ஆழமும் .....
நீலக் கடலின்
நீளமும்.....
ஒரு புள்ளிதான்
எனக்கு.....நீ
சம்மதம்
சொன்னால்.....
தாண்டி
வருவேன்.....!!

நிஜம்
இன்றோ
நிழல்
என்றாகியதே......
மாறாது
என் வேதனை
ஒரு போதும்
கூறாதே.....
மறந்திருப்பேன்
என்று.....!!

வந்தவழியே
திரும்பிப்
போக..... வாழ்க்கை
என்ன
அவ்வளவு
கடினமா.....?
இன்னும்
கொஞ்சம்
அடி எடுத்து
வைத்துப்பார்.....
வாழப் பிடிக்கும்
உனக்கும்.....!!

காசு பணம்
எல்லாம்
கல்லு....மனம்
விட்டு சொல்லு
மனசுதானே
பெரிதென்று.....!!

அழகென்று
இவ்வுலகில்
இருக்குமென்றால்
அது
அன்பாலே
அன்பு செய்யும்
அந்த அன்புதான்
என் அன்பே.....!!

எழுதியவர் : thampu (15-Jan-16, 5:29 am)
Tanglish : enakaana thedal
பார்வை : 189

மேலே