நிறமற்றுக் கிடக்கிறது மறதி

வானம் சிமிட்டி
இழுக்கையில் நீலவண்ணம்
குதிக்கிறது....

மொட்டைமாடிக் கனவுக்குள்
அது இரவின் நிறம்
பூசிக் கொள்கிறது...

உருண்டு புரளும்
உள் வெளிக்குள் நிலவின் .
நிறம் பதிக்கிறது...

மூளை விழிக்க, உடல் விழியா
நிலையில் கழுத்தில் அமர்ந்த
நிறத்துக்கு சிவப்பு செய்கிறேன்...

மூச்சடைத்த நிலைக்குள்
மெல்லிய ரோமக் கால்கள்
பச்சை துப்பின...

மிதப்பது போல சுருண்ட
கனவுக்குள் தூக்கமாய்
போகிறது நிறங்கள்...

விடிந்த பின் சொல்ல
நிறமற்றுக் கிடக்கிறது
மறதி....


கவிஜி

எழுதியவர் : கவிஜி (15-Jan-16, 9:28 am)
பார்வை : 999

மேலே