கும்மியடி பெண்ணே கும்மியடி

கும்மியடி பெண்ணே கும்மியடி
குலவையிட்டு கும்மி யடி
மண்ணில் மனித வாழ்வு செழிக்க
காரணம் யாரென்று சொல்லி யடி
பஞ்சபூதம் அளித்த பரிசுதானே
வேறு இல்லையென்று கூறி யடி

கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழர் குலம் ஓங்கிட கும்மியடி
நன்றி என்றொரு வார்த்தை சொல்லிட
ஞானம் பெற்றோர் நாமடி - அதை
பண்டிகையாய் கொண்டாடிடும்
பழக்கம் கூட கொண்டோமடி

கும்மியடி பெண்ணே கும்மியடி
குனட்டும் கண்களால் கும்மியடி
முப்போகம் கண்ட பூமியடி
மூவேந்தர் ஆண்ட பூமியடி
தப்பாமலே மாரிமழை
தவறாம பெய்த பூமியடி
நாகரீகம் சொன்ன பூமியடி
நல்லோர்கள் வாழ்ந்த பூமியடி
நானிலத்தில் எல்லோருக்கும்
நல்ல சோறு போட்ட பூமியடி
தாயாக தமிழை பெற்ற
தமிழர் வாழ்ந்த தங்க பூமியடி


கும்மியடி பெண்ணே கும்மியடி
கோல விழிகளாட்டி கும்மியடி
கிணியிட்டு கும்மியடி
கிணையிசையுடன் கும்மியடி
பாரம்பரியம் பறைசாற்றிட
பறையிசை சாத்தி கும்மியடி
கழனி உழைத்த ஏறுக்கெல்லாம்
ஏறு தழுவும் விழா நாளையடி

கும்மியடி பெண்ணே கும்மியடி
அம்மி அரைத்த காலம் போச்சென்று கும்மியடி
வெம்மி வெடிச்ச வெறுமை போச்சென்று கும்மியடி
நம்பி இருக்கு நாடும் நம்மை - என்று
நன்றாய் சொல்லி கும்மியடி

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (15-Jan-16, 1:27 pm)
பார்வை : 3050

மேலே