தமிழர் திருநாள் வாழ்த்து

தமிழர் திருநாள் வாழ்த்து..!

உழுதுண்டு வாழ்வதற்கு
ஒப்பில்லை யெனதமிழன்
கழனியிலே சேற்றுழுது
நாற்றுநட்டு களைபறித்து
கதிர்அறுத்து களம்சேர்க்க
கரம்கொடுத்த கதிரவனை,
கால்நடையை, மூத்தோரை
வணங்கயெழுந் தையினிலே
வளமோங்கி வாழ்கவென
வாழ்த்துகிறேன் வாழியவே..!

எழுதியவர் : இராக. உதயசூரியன். (16-Jan-16, 12:09 am)
பார்வை : 186

மேலே